Kovaiinfo, Coimbatore City information
Coimbatore

Coimbatore / Kovai Information


Coimbatore Places

Kovai Kutralam


Coimbatore palaces - Kovai Kutralam

Siruvani, Coimbatore, Tamil Nadu 641114, India.
A popular tourist draw, Kovai Kutralam comes under the Siruvani mountain range in Coimbatore. Located on the Western Ghats, the cascading waterfalls form a picture perfect backdrop for spending some wonderful time with your loved ones in nature's lap.
It is located on the western ghat mountain range that lies to the west of this city at a distance of about 35 kms from Coimbatore.
The siruvani dam is just above this water fall and this place is under the control of forest department. Permission has to be sought from them to visit this Kovai Kutralam Falls. Limited bus service is available from the city and this area is out of bounds after 5 pm.
places to visit in Coimbatore
Timings:
10.00 am to 3.30 pm
Holidays:
Every Monday - (Maintenance Day)


Kovai Kutralam
கோவைக் குற்றாலம் அருவி தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் நகரின் மேற்கே 35 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைகளின் கிழக்குச் சரிவில் அடிவாரத்துக்கு சற்று மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
Kovai Kutralam
இந்த அருவி கரடு முரடான ஆபத்தான வழியில் ஓடி வரும் ஒரு சிறிய அருவியாகும். சற்று அகலமாகவும், குறைந்த உயரத்திலிருந்து விழும் பகுதியில் குளிக்கும் பகுதி உள்ளது.
Kovai Kutralam
இந்த அருவி சிறுவாணி மலைப்பகுதியில் கிழக்குச் சரிவில் நொய்யல் ஆற்றை உருவாக்கும் சிற்றாறுகளில் ஒன்றான பெரியாற்றில் இந்த அருவி உள்ளது. சிறுவாணி மலையின் கிழக்குச் சரிவில் உருவாவதால் சிறுவாணி அருவி எனவும் அழைக்கப்பட்டாலும் இந்த அருவிக்கு சிறுவாணி ஆற்றுடனோ சிறுவாணி அணையுடனோ தொடர்பு ஏதுமில்லை.
Kovai Kutralam

Kovai Kutralam
கோடை காலத்தில் பொதுவாக நீரோட்டம் குறைவாக இருக்கும். இந்த அருவி இயற்கை எழிலுக்கும் குளிர்ச்சியான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது.
Kovai Kutralam
கோவையிலிருந்து சாடிவயல் வரை பேருந்து தனியார் ஊர்திகளில் செல்லலாம். சாடிவயல் வனத்துறை சோதனைச் சாவடியில் கட்டணம் 60 ரூபாய் செலுத்தி அருவிக்கு செல்ல அனுமதி பெறலாம். அங்கிருந்து அடிவாரம் வரை வனத்துறை மூலம் இயக்கப்படும் வண்டியில் மட்டுமே செல்ல முடியும். அடிவாரத்திலிருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் மலைப்பகுதியில் நடந்து சென்று அருவியை அடையலாம்.பாதுகாக்கப்பட்டட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
Kovai Kutralam
வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா செல்ல ஏற்றதாக விளங்குகிறது.
இது கோவையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கே பலவகையான பறவைகளையும் விலங்குகளையும் ஒருங்கே காண முடியும். இப்பகுதியில் குரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன. கோவையிலிருந்து சாடிவயல் வரை அரசுப் பேருந்து செல்கிறது. சாடி வயல் வனத்துறை சோதனைச் சாவடியைக் கடந்து அரை மணி நேரம் மலைப்பகுதியில் நடந்தால் கோவை குற்றாலத்தை அடையலாம்
கோவையிலிருந்து சிறுவாணி மற்றும் சாடிவயல் செல்லும் பேருந்துகள் (59C, 59, 14E) இங்கு செல்கின்றன.


குழந்தைகளுக்கான தூயத்தமிழ் பெயர்கள்
Hits: 5880, Rating : ( 4.4 ) by 4235 User(s).



Latest Info.

Coimbatore to Coorg

/Coimbatore-Bus-Routes

Name Transfer on Property Tax

/Coimbatore Property Tax

Coimbatore Property Tax Pay Online

/Coimbatore Property Tax

Tamil Baby names by nakshatra

/Latest News

Coimbatore omni bus stand, Gandhipuram

/Coimbatore-Bus-Routes